இறங்கி வந்த கமல்ஹாசன்!
கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் உத்தம வில்லன் . கடந்த 2015ஆம் ஆண்டு இந்த படம் வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. மிகப்பெரிய நஷ்டத்தால் அவர்களால் தொடர்ந்து செயல்பட முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இன்னும் அவர்களால் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவரமுடியவில்லை.
இந்நிலையில் இந்த படத்தின் நஷ்டத்துக்கு பொறுப்பேற்று கமல் மீண்டும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு நடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் 10 ஆண்டுகள் ஆகியும் அவர் படம் நடித்துத் தரவில்லை என திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்திருந்தனர்.
இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் கமல்ஹாசன் இப்போது பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.