"ஊரடங்கை நிராகரிக்க முடியாது" சுகாதார அமைச்சர் திட்டவட்டம்

20.11.2021 10:30:44

ஜேர்மனி தற்போது கொரோனா தொற்றின் நான்காவது அலையின் காரணமாக "தேசிய அவசரநிலையை" எதிர்கொள்கிறது என்று சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

ஜேர்மனியில் கடந்த இரண்டு வாரங்களில், புதிய வழக்குகளின் எண்ணிக்கை 60% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் தொற்றுநோய் நிலைமை கடந்த வாரத்தில் மோசமடைந்துள்ளது என்றும், அது இப்போது "கடந்த வாரத்தை விட மிகவும் தீவிரமாக இருக்கிறது" என்றும், நாடு "தேசிய அவசரநிலையை" எதிர்கொள்கிறது என்றும் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறினார்.

புதிய பொது உரடங்கு விதிகளை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, "நாங்கள் எதையும் நிராகரிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்" என்றார்.

ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) தலைவர் லோதர் வைலருடன் (Lothar Wieler) இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் ஸ்பான் பேசினார்.