தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்

17.07.2021 10:36:56

 

தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முதலமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கலவரத்தினால், இந்தியர்கள் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.

ஆகவே தென்னாபிரிக்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.