
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்.
27.09.2025 09:29:03
மன்னார் பகுதியில் நேற்று இரவு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னர் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன் கழகம் அடக்கும் பொலிஸார் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில்வண்ணார் நகரை நோக்கி கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் அங்கு ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
கழகம் அடக்கும் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.