இங்கிலாந்து அரசாங்கம் புதிய தீர்மானம்!
13.11.2025 15:38:17
நீண்ட காத்திருப்பு பட்டியலைக் குறைக்கும் வகையில் learner drivers மாத்திரமே சாரதி தேர்வுக்கு முன்பதிவு செய்ய முடியும் என இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை கட்டுப்படுத்தவும் ஒன்லைன் மோசடிகளால் பொது மக்கள் “சுரண்டப்படுவதை” தடுக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக போக்குவரத்து செயலாளர் Heidi Alexander குறிப்பிட்டுள்ளார் .
இதேநேரம் சாரதி தேர்வுக்கான காத்திருப்பு பட்டியல் 2026 கோடை வரை குறையாது என்றும் போக்குவரத்து செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார் .
தேர்வுக்கு யார் முன்பதிவு செய்யலாம் என்பது தொடர்பில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதோடு, நிலுவையில் உள்ள பணியிடங்களைக் குறைக்க பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த தேர்வாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .