ஜனநாயகத்தின் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை

19.03.2023 22:48:55

 

நாட்டை மோசமாக காட்டுவதற்கும், அவநம்பிக்கையாக பேசுவது போன்ற நடவடிக்கையிலும் சிலர் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

 

இந்தியாடுடே நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பெற்றுக்கொண்ட வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியாததால் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை இருந்த அனைத்து அரசாங்கங்களும் தங்கள் திறமைக்கு ஏற்ப செயற்பட்டு முடிவுகளை பெற்றதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அவ்வாறே தமது அரசாங்கமும் புதிய முடிவுகளை எடுக்க விரும்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.