அமெரிக்கா காட்டிய பச்சைக்கொடி

19.01.2023 22:21:39

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக, இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பு அளிக்கத் தயார்

அனைத்து கடன் வழங்குநர்களும் நியாயமானதும் சமமானதுமான நடவடிக்கைக்கு இணங்கும் போது, தாமும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு வரவேற்பு

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் குறித்த இந்தியாவின் உறுதிப்பாட்டை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் நிதி உதவிக்கு திடமான ஆதரவை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.