பா.ஜனதாவில் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் இணைவேன்

04.01.2023 22:53:02

பா.ஜனதா கட்சியில் ‘சஸ்பெண்டு’ ஆகி இருக்கிறேன் என்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும். பா.ஜனதாவில் ஆடியோ வீடியோ விவகாரத்தில் எவ்வளவோ பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழக பா.ஜனதாவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் பா.ஜனதா கட்சியில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகினார்.

 இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டார். பா.ஜனதாவில் இருந்து விலகியது தொடர்பான காரணம் குறித்து காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி வருமாறு

பா.ஜனதா கட்சியில் 'சஸ்பெண்டு' ஆகி இருக்கிறேன் என்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும். அதையும் தாண்டி துபாயில் என்னென்ன விஷயங்கள் நடந்தது என்பது தொடர்பாக பத்திரிகைகளில் வந்துள்ளது. 150 பேர் இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை என்னை பற்றி தரக்குறைவாக பேசி இருக்கிறார். பா.ஜனதாவில் ஆடியோ வீடியோ விவகாரத்தில் எவ்வளவோ பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கான நீதி எங்கே? அவர்கள் வெளியே வந்து பேசப் பயப்படலாம். அவர்களின் பதவி பறி போகலாம் அல்லது அவர்கள் குடும்ப ரீதியாக மன அழுத்தத்துக்கு ஆளாகலாம். எனவே அவர்கள் பேச பயப்படுகிறார்கள். பா.ஜனதா கட்சியில் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் சேருவேன். இது என் தாய்வீடு என்று சொல்லி இருக்கிறேன். கட்சியில் சேர்க்காவிட்டால் கூட எனது ஓட்டு

பா.ஜனதாவுக்குத் தான்.