வடக்கு கிழக்கிற்கு காவல்துறை அதிகாரம்

29.01.2023 12:07:00

காவல்துறை திணைக்களம் பத்து பிரிவுகளாக பிளவடையும் சாத்தியம் உருவாகியுள்ளதாக ஓய்வு பெற்ற உயர் காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று சுட்டிக்கட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கினால் நாட்டின் காவல்துறை திணைக்களம் பத்து துண்டுகளாக பிளவடையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, பயங்கரவாத தடைப்பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இரகசிய காவல்துறை பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு என்பன அந்தந்த மாகாண முதலமைச்சர்களின் அனுமதியின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனுமதி

இந்நிலையில், மும்மை நகரம் மீதான குண்டுத் தாக்குதல் மற்றும் காஷ்மீர் மீதான தாக்குதல்களின் போது இந்த நிலைமை உருவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஸ்டிர மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு விசேட படையினரை அனுமதியின்றி அனுப்பி வைக்க மத்திய அரசாங்கத்தினால் முடியவில்லை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.