வெள்ளத்தில் மூழ்கிய காலி நகர வீதிகள்!

26.09.2025 08:08:15

நேற்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கின. காலி - வக்வெல்ல பிரதான வீதி காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீரில் மூழ்கியதுடன், காலி - பத்தேகம மாபலகம பிரதான வீதி தலாபிட்டிய பகுதியில் நீரில் மூழ்கியது. அத்துடன் சரேன்துகடே மற்றும் தனிபொல் கங்க சந்தி ஆகிய பகுதிகளும் நீரில் மூழ்கின. இதற்கிடையில், காலி நகரின் பல கிளை வீதிகளும் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.