கமல்ஹாசன், விஜய் மே தின வாழ்த்து.

01.05.2024 07:43:36

உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று மே தின கொண்டாட்டம் குறித்து தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல்  நடிகரும்  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யும் தனது சமூக வலைதளத்தில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

கமல்ஹாசன்: உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.  உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.

 

விஜய்: உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல்வாதிகள் நேற்று தங்களது மே தின வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் இன்று கமல்ஹாசன் மற்றும் விஜய் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.