பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

26.04.2024 07:42:24

அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில்  அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக மாணவர்கள் வோசிங்டனில் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திற்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காகவும்  வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் அங்குகுழுமியுள்ளனர்.

 

அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழகங்களை போல ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழக மாணவர்களிற்கான எங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவும் அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழக மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும் நாங்கள் இங்குவந்திருக்கின்றோம் என அனா வெசெல்ஸ் என்ற மாணவி அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கும்இராஜாங்க திணைக்களத்திற்கும் அருகில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

தலைநகரில் நாங்கள் எதனையாவது செய்யாவிட்டால் நாங்கள் எங்கள் தார்மீக கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை என்பதே அர்த்தம் என மாணவி வெசெல்ஸ் தெரிவித்துள்ளார்.