போர் சூழ்நிலையிலிருந்து ஈரானை மீட்டெடுக்க முயற்சி.
28.10.2026 14:57:33
ஈரானை “போரும் இல்லாமல், அமைதியும் இல்லாமல்” இருக்கும் தற்போதைய சூழ்நிலையிலிருந்து மீட்டெடுக்கத் தனது அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில், இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான உத்தரவை ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கொமெய்னி பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அந்த உத்தரவைச் செயல்படுத்த அரசாங்கத்திடம் உள்ள அனைத்து வளங்களையும் திறன்களையும் பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.