குறிஞ்சாக்கேணி – கிண்ணியாவுக்கு இடையில் பேருந்து சேவை

24.11.2021 06:31:55

மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் பலியானதையடுத்து, இன்று (24) முதல் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.

காக்காமுனையில் இருந்து நடுத்தீவு, குறிஞ்சாக்கேணி ஊடாக கிண்ணியாவுக்கு பேருந்துச் சேவை இன்று காலை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்