ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட பருத்திதுறை வைத்தியசாலை

23.03.2024 09:25:27

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

 

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் திறந்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சீதா அறம்பொட, சுரேன் ராகவன், வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் ராமநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.