ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவு-

04.07.2024 08:21:44

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவளிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நம்புவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் திகதியை நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வர்த்தகரான தயான் லெனவ நேற்று உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார். .

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்த மனுவை சமர்ப்பிப்பதற்கு முன்னர் குறித்த நபர் தன்னிடமிருந்தோ அல்லது சட்டத்தரணிகளிடமிருந்தோ எந்தவொரு கருத்தையும் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.