பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு அச்சுறுத்தல்

18.09.2024 07:58:02

புளோரிடாவில் பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்திய சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் இரண்டு உள்ளூர் பள்ளிகளில் கூட்டு துப்பாக்கி சூடு நடத்துவதாக அச்சுறுத்தியதற்காக 11 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

   

கார்லோ "கிங்ஸ்டன்" டோரெல்லி(Carlo "Kingston" Dorelli) என்ற சிறுவன், அவரது வகுப்பு தோழர்களிடம் இருந்து பெற்ற குறிப்புக்குப் பிறகு, திங்களன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஷெரிப் மைக் சிட்வுட்(Sheriff Mike Chitwood) கூறுகையில், சிறுவனின் வீட்டில் ஏர்சாஃப்ட் ரைஃபிள்கள்(airsoft rifles), பிஸ்டல்கள், போலியான தோட்டிகள், கத்திகள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களை கண்டுபிடித்தனர்.

மேலும் சிறுவன் உருவாக்கிய இலக்குகளின் "கொலை பட்டியலையும்" அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜார்ஜியாவின் அபலாச்சி(Apalachee) உயர்நிலைப் பள்ளியில் 14 வயது சிறுவன் நான்கு பேரை கொன்றதற்காக குற்றச்சாட்டுக்கு உள்ளானதை தொடர்ந்து, இந்த கைது நடந்துள்ளது.