சசிகலா விவகாரம் - ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்
மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்தநிலையில் அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தநிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சையது கான் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை அழைத்து நானே நேரில் தெரிவிப்பேன் என ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், துணை செயலாளர் முகோடை, ராமர், முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் உடனிருந்தார்.