புகையிரதம் தடம்புரள்வு - தடைப்பட்டுள்ள முக்கிய போக்குவரத்துக்கள்
05.07.2023 10:13:05
வடகொட மற்றும் தலவாக்கலைக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் மலையகப் பகுதியில் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தின் புகையிரத பாதையில் மரமொன்று வீழ்ந்ததன் காரணமாக தடம் புரண்டதாக துணை நிர்வாகி எம்.ஜே.இடிபோலகே, குறிப்பிட்டுள்ளார்.
மாற்று நடவடிக்கை
இதன் காரணமாக மலையக பகுதியில் புகையிரத போக்குவரத்து கொட்டகலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் இடிபோலகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கும்புருகமுவ மற்றும் வெலிகமவிற்கு இடையில் புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் கரையோரப் பாதையில் பயணிக்கும் பல புகையிரதங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.