போராட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
08.04.2022 09:19:31
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மண்டபத்தில் போராட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரத்தை சேர்ந்த ராமநாதன் உள்ளிட்டோர் அளித்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தீட்சிதர்களை விரும்பாத குழு தவறான தகவல் வெளியிட்டு கோயில் வளாகத்துக்கு அருகில் போராட்டம் நடத்தி வருவதாக வழக்கு தொடரப்பட்டது.