
அஜித்குமார் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு!
21.06.2025 07:00:00
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. தற்போது, அஜித் தீவிரமாக ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். |
இந்நிலையில், நடிகர் அஜித்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நேரில் சந்தித்துள்ளனர். இது தொடர்பான போட்டோவை யுவன் அவரது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அஜித்தை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், கார்களை பற்றி இருவரும் பேசிக்கொண்டு இருந்ததாகவும்" தெரிவித்துள்ளார். தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. |