விவேக் சாரின் கனவுகளை நாம் அனைவரும் நிறைவேற்ற முடியும் - சிபிராஜ்

17.04.2021 10:10:09

விவேக் சாரின் கனவுகளை நாம் அனைவரும் நிறைவேற்ற முடியும் என்று நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டுவந்த காமெடி நடிகர் விவேக் இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், பொது மக்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிபிராஜ், ஒரு நடிகராக அவர் விட்டு சென்ற இடத்தை யாரும் நிரப்ப முடியாவிட்டாலும் அவருடைய கனவுகளை நாம் அனைவரும் நிறைவேற்ற முடியும். அவரின் 1 கோடி மரங்கள் நடும் இலக்கில் 33 லட்சம் மரங்களை அவர் நட்டு விட்டார். 

நாம் அனைவரும் மனது வைத்தால் அந்த 1 கோடி இலக்கை வெகு சில நாட்களிலே அடைந்து விட முடியும். அதுவே நாம் அவருக்கு செலுத்தும் மரியாதையாகும்.