இரண்டாவது கடன் தவணைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

13.12.2023 04:19:00

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

 

நேற்று (செவ்வாய்கிழமை) முதலாவது மீளாய்வு இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் விவாக்கப்பட்ட நிதிவசதியின் கீழ் இலங்கைக்கு இதுவரை மொத்த நிதி உதவி 508 மில்லியன்களாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது