வட மாகாணத்தில் அதிகரிக்கும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
29.10.2021 05:16:43
வட மாகாணத்தில் அதிகரித்துவரும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடமாகாண புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பில் உள்ள வட மாகாண ஆளுநர் அலுவலத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தமது பூரண ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்ததாகச் சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.