96 ஜானுவாக களம் இறங்கிய பிக்பாஸ் பிரியங்கா.. வாழ்த்திய திரிஷா

20.02.2022 12:41:15

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் அதன்பின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் கலந்து கொண்ட பிரியங்கா அவரின் தனித்துவத்தால் இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அவர் மீண்டும் தொகுபாளினியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. 96 படத்தில் இடம்பெறும் திரிஷாவின் ஜானு கதாப்பாத்திரத்தை போன்று உடை அணிந்து பதிவிட்டிருக்கிறார். இப்புகைப்படம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த திரிஷா அவருக்கு பதிலளிக்கும் வகையில் “ஹா ஹா லவ்” என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.