சட்டத்தரணி தொழிலுக்கு வாழ்நாள் தடை
29.02.2024 08:40:23
சட்டத்தரணி கொடித்துவக்குவுக்கு இனிமேல் சட்டத்தரணி தொழில் செய்வதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாகாநந்த கொடித்துவக்குநாகானந்த கொடித்துவக்குவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த பின்னர் பிரியந்த ஜயவர்தன, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதேவேளை தேசிய மக்கள் சக்தியை தேர்தல் ஆணைக்குழு பதிவு செய்த விதம் சட்டவிரோதமானது என்றும், இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதிக்கக் கோரியும், நாகானந்த கொடித்துவக்கு அண்மையில் மனுவொன்னை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.