கெப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த புதிய தகவல்
24.07.2023 16:53:25
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கெப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜோன் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கெப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் கெப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் தயாராகிவிட்டதாகவும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.