இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி

30.12.2021 06:52:31

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று (30) இடம்பெறவுள்ளது.

305 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்க அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில், 327 ஓட்டங்களுக்கும், இரண்டாம் இன்னிங்ஸில் 174 ஓட்டங்களுக்கும் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்க அணி, வெற்றிக்காக மேலும் 211 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.