இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல்!

14.04.2024 09:13:18

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி  இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு இஸ்லாமிய  பொலிஸ்  உறுப்பினர்கள் கொல்லப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 10க்கும் மேற்பட்ட க்ரூஸ் ஏவுகணைகள் அடங்கியுள்ளதாகவும் எனினும் இந்த தாக்குதலில் 7 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை ஈரான் இந்த தாக்குதலுக்காக 200 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலை தடுத்து நிறுவத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் நிற்க உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.