காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் 90 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், காபூலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 90 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ‘ஐஎஸ்ஐஎஸ்-கே’ அமைப்பு பொறுப்பேற்ற நிலையில், தலிபான்கள் தங்களுக்கு ஏதும் தெரியாது என்று கைவிரித்துள்ளனர்.
இது, சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அமெரிக்க மற்றும் ‘நோட்டோ’ படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானை, கடந்த சில வாரங்களுக்கு முன் தலிபான்கள் (இஸ்லாமிய தீவிரவாத குழு) கைப்பற்றினர்.
அவர்கள், தங்களது மத அடிப்படைவாத சிந்தாந்தபடி புதிய அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால், இங்கு இன்னும் முறைப்படி ஆட்சி மாற்றம் நிகழவில்லை.
இந்நிலையில், அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள், ஆப்கனில் தங்கியுள்ள தங்கள் நாட்டு மக்கள், தங்களுக்கு உதவிய ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஆகியோரை அந்நாட்டில் இருந்து மீட்டு வருகின்றன. விமானம் மூலமே அழைத்து செல்லப்படுவதால், தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
கடந்த 14ம் தேதி தொடங்கி இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆப்கானில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், வரும் 31ம் தேதிக்குள் தங்களது பிரஜைகள் முழுவதுமாக வெளியேற்றப்படுவர் என்று அமெரிக்கா தெரிவித்தது.
இதற்கிடையே, காபூல் விமானநிலையத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளும் எச்சரிக்கை விடுத்தன. மேலும், ஐஎஸ்ஐஎஸ் - கே தீவிரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பிரிவினர் தாக்குல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், விமான நிலையத்தில் அபே கேட், கிழக்கு கேட், வடக்கு கேட் உள்ளிட்டப் பகுதிகளில் குழுமியிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பரோன் ஓட்டல் (பிரிட்டிஷ் வீரர்கள் தங்கியிருந்தனர்), விமான நிலையத்தின் அபே கேட் பகுதியில் நேற்று மாலை 3. 45 மணியளவில் (இந்திய நேரப்படி) திடீர் தற்ெகாலை படை ெவடிகுண்டு தாக்குதல் நடந்தது.