கண்கலங்கிய இயக்குநர்

03.03.2024 09:00:00

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர். இவர், இதுவரை யாரடி நீ மோகினி, குட்டி,  உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, மதில், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில்   கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான படம் யாரடி நீ மோகினி. இப்படத்தில் நடிகர் தனுஷ், நயன்தாரா, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
 

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
 

இப்படம் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவது. தனுஷின் கேரியரிலும் முக்கியமான படம் என்று குறிப்பிடப்படுகிறத

கவுதம் காம்பீரை தொடர்ந்து மேலும் ஒரு பாஜக எம்பி அரசியலில் இருந்து விலகல்!

இந்த நிலையில், பழைய படங்களை திரும்பவும் தியேட்டர்களில் ரிலீசாகி வரும் நிலையில், சென்னை, கமலா தியேட்டரில் யாரடி நீ மோகினி படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என்ற பாடல் ஓட, ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து அந்த பாடலை பாட, இப்படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இப்படத்தை பார்த்து கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
 

இத்தனை ஆண்டுகள் கழித்தும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதை கண்டு இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் நெகிழ்ச்சி அடைந்து, தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.