பலாலி -தமிழகம் பிற்போடப்பட்ட விமானசேவை
02.07.2022 00:10:00
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் தமிழகத்திற்கான விமான சேவை மீள ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் கடற்றொழில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சட்டச்சிக்கல்களே காரணம்
இந்திய தரப்பில் உள்ள எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்டச்சிக்கல்கள் காரணமாக விமானசேவையை பிற்போட நேர்ந்ததாக தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.