வரலட்சுமி நடிக்கும் 'கொன்றால் பாவம்'
வரலட்சுமி நடிக்கும் 'கொன்றால் பாவம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'கொன்றால் பாவம்'. 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையான இந்த திரைப்படம் மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதில், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை கோடை ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் 'கொன்றால் பாவம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரை நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.