அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டம்

13.07.2024 09:38:17

சிரிப்பு என்பது வாழ்க்கையை அழகாக்கும் ஒரு மருந்து எனலாம். சுழலும் இயந்திர உலகில்  வாய்விட்டு சிரிப்பதை பலர் மறந்து இருக்கும் நிலையில் ,ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிக்க வேண்டும் என்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிரிப்பதன் மூலம் இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தில் வசிக்கும் மக்கள் நாளொன்றுக்கு ஒருமுறையாவது சிரிக்க வேண்டும் என்ற சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாதத்தின் 8ஆவது நாளை சிரிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.