நேற்று 513,741 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

31.07.2021 08:38:08

நேற்று (30) கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 513,741 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 500,000 க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பு நடவடிக்கையின் கீழ், இலங்கையில் நேற்றுமுன்தினம் நேற்று மாத்திரம் இலங்கையில் 515, 830 பேருக்கும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.