வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!.

03.04.2026 15:04:58

தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. ஆனால், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வேல்முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட சிலரோடு வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் ‘தொகுதிக்கு தலா 3 பேர் என்கிற அடிப்படையில் 27 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்து அந்த பட்டியலை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறோம்.. அதில் தகுந்த வேட்பாளர்களை பாஜக தலைமை முடிவு செய்யும்’ என கூறியிருந்தார்
.
மேலும் அந்த வேட்பாளர் பட்டியலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயரும் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அண்ணாமலை தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்ம் என அழுத்தம் கொடுப்பதால்தான் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வதில் தாமதமாகி வருவதாக பாஜக வட்டாரத்தில் சொல்லப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழிசை சவுந்தர்ராஜன் சென்னை மயிலாப்பூர் தொகுதியிலும், எல்.முருகன் அவினாசி தொகுதியிலும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியிலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும் போட்டியிடுக்கிறார்கள்.