புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

25.11.2021 06:13:13

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறை பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

2021.11.24 அன்று இரவு 9. 00 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார் இவர் திரும்பி வராத நிலையில்
இவரைத்தேடி அதிகாலை 2.00 மணிக்கு உறவினர்கள்  சென்றவேளை  காட்டுபகுதியில் இறந்து கிடந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கெருடமடு. மன்னகண்டலை சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என்பவராவார்
புதுக்குடியிருப்பு காவற்துறையினரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.