பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது
13.11.2021 09:39:37
கொரோனா ஊரடங்குக்கு பின் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் கல்வி தொடர்பாக வேறு பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராமங்களில் டிஜிட்டல் முறையில் கல்வி பயில வசதிகளை ஏற்படுத்த கோரி தமிழ்நாடு பெண்கள் இயக்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு வழக்கு விசாரணையை நவம்பர் 24க்கு ஒத்திவைத்தனர்.