தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.

16.05.2024 08:25:21

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று திடீரென ஒரு சவரனுக்கு 560 உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து  ரூபாய் 6,795 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 560 உயர்ந்து ரூபாய் 54,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

 

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,265  எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 92.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 92,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது