பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

26.01.2026 14:04:34

பிரித்தானியா முழுவதும் டபுள் கோவிட் (Double Covid) வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.

இந்த டபுள் கோவிட் குறித்து வைத்தியர்கள் தெரிவித்ததாவது,

இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்து, நோயாளிகள் எண்ணிக்கை தினசரி உயர்ந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, முதியோர்கள், நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

இந்த வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள, உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தீவிர பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலையை தவிர்க்கலாம் என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல், கூட்டம் அதிகமான இடங்களை தவிர்த்தல் (சமூக இடைவெளி) போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பிரித்தானியாவின் பல பகுதிகளில் வைத்தியசாலைகள் மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றன. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சுகாதார அமைப்புகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.