ரணிலே அடுத்த இலக்கு.

07.08.2025 13:38:40

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைகுசெய்யப்படுவது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

விரைவில் கைதுசெய்யப்படபோகும் ஒரு அரசியல்வாதியின் பிரத்தியேக செயளாலரை விசாரணை செய்துள்ளோம் என்றும்,  அவரின் ஆலோசகரை நிதி மோசடி பிரிவுக்கு அழைத்து வாக்கு மூலம் பெற்றுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

அடுத்து யாரை விசாரணை  செய்யவுள்ளோம் எனள்பது தொடர்பில் அவர் மறைமுகமாக இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

 

ரணில் விக்ரமசிங்க

கடந்த 4 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக செயலாளரான சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வு பிரிவிற்கு (CID) அழைக்கப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணம் ஒன்று தொடர்பான விசாரணைக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும்,  ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து ரணிலை இலக்கு வைத்த ஒன்றா என கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.