புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பிய பிரித்தானியா!

19.09.2025 07:50:15

பிரித்தானிய அரசு தனது புதிய one-in one-out ஒப்பந்தத்தின் கீழ், முதல் புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. BBC மற்றும் Telegraph செய்திகளின்படி, திருப்பி அனுப்பப்பட்டவர் இந்திய பிரஜை என கூறப்படுகிறது. பிரான்ஸ் துறைமுகம் ஒருவரை ஏற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்தியிருந்தாலும், அவரது தேசியத்தை வெளியிட மறுத்துள்ளது.

இந்த ஒப்பந்தம் ஜூலை மாதத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு வந்தபோது கையெழுத்தானது.

'ஒருவர் வெளியேறினாரல் ஒருவர் உள்ளே' என்ற அடிப்படையில் பிரான்சில் உள்ள சரிபார்க்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை பிரித்தானியா ஏற்கும் திட்டம் இது.

ஆகஸ்ட் மாதத்தில் சிறிய படகில் பிரித்தானியாவிற்கு வந்த அந்த நபர், ஒரு வணிக விமானத்தில் பிரான்சுக்கு அனுப்பப்பட்டார்.

இது, மனித கடத்தலகுற்றசாட்டுகளுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். மேலும், பிரித்தானிய அரசு எல்லை பாதுகாப்பிற்காக 100 மில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்கியுள்ளது.