"செங்கடகல' பிரகடனம் "

08.07.2022 10:21:00

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தும் ‘செங்கடகல’ பிரகடனம் இன்று வெளியிடப்படவுள்ளது.

மகாநாயக்க தேரர்கள், மகா சங்கத்தினர் மற்றும் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் கண்டியில் இன்று மாலை 4 மணிக்கு குறித்த பிரகடனம் வெளியிடப்படவுள்ளது.

சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கட்சிகளிடமும் குறித்த பிரகடனம் ஊடாக கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாளை அரச தலைவருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க பல அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

இதனால் கொழும்பின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு அதிரடி படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.