சூப்பர் ஸ்டாருக்கு கண்டிசன் போட்ட ராஜமெளலி!
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படம் சமீபத்தில் வெளியாகி வசூல் குவித்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தை ராஜமெளலி இயக்கி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்திற்காக பலவித கெட்டப்புகளில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இதற்காக சுமார் 2 வருடம் மொத்தமாக அவரிடம் கால்ஷூட் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் வேறுபடமே அவர் கமிட்டாகவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்காக தனி ஹேர் ஸ்டைல் வைத்துள்ளதால் இது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, இப்படம் முடியும்வரை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் என ராஜமெளலி சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுக்கு கண்டிசன் போட்டுள்ளாராம்.
ஏற்கனவே தெலுங்கில் இவர் இயக்கிய பாகுபலி1 மற்றும் 2 ஆகிய பாகங்கள் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து, ஆர்.ஆர்.ஆர் படமும் சாதனை படைத்து, நாட்டு நாட்டு பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்தது. எனவே சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இவர் இணையும் அடுத்த படமும் உலகளவில் அதிக எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.