வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருக்கப்போகும் அரச உத்தியோகத்தர்கள்

06.06.2022 09:40:11

அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையினை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் திணேஷ் குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மாதிவெல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் திணேஷ் குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் 4 நாட்களாக மட்டுப்படுத்தப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.