மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,023 கனஅடியாக குறைவு

18.08.2021 07:25:57

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,379 கனஅடியில் இருந்து 4,023 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.09 அடியாக குறைந்துள்ளது. அணையில் நீர்இருப்பு 31.08 டிஎம்சியாக இருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.