தமிழக முதல்வரை சந்திக்க எதிர்பார்ப்பு - சுமந்திரன்

12.09.2021 05:21:37

தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை தமிழர்கள் விடயத்தில் தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.