சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக ஜெயம் ரவி!
சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவிலலை என சொல்லப்பட்டது.
படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நெகட்டிவ் தன்மையுள்ள ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த வேடத்தில் நடிக்க ஜெயம் ரவி சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாகப் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.