பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக ஜிகே வாசன் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார்.
கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆகியும் கடந்த சில தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை எனவும், வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்துச் செயல்பட கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளமையே கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், இடையில் பா.ஜ.க. உடனும், மாநிலத்தில் அ.தி.மு.க. உடனும் த.மா.கா. தொடர்ந்து ஒரு நட்பு சக்தியாகவே விளங்கும் எனவும் கூறினார்.
மேலும், த.வெ.க. மற்றும் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியை "சந்தர்ப்பவாதக் கூட்டணி" என்றும் ஜி.கே. வாசன் இதன்போது விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், த.மா.கா. தனது தனித்தன்மையை இழக்க விரும்பவில்லை என்றும், பாராளுமன்றம் தேர்தல் நேரங்களில் கூட்டணி குறித்துப் பின்னர் முடிவு எடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.