ரூ50 கோடி கோயில் நில மோசடி.
|
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்பனை செய்த விவகாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்த வழக்கில், இப்போது புதுச்சேரி அரசின் முக்கிய உயர் அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. என்னதான் நடந்தது?
|
|
ரெயின்போ நகர் 7வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 64035 சதுர அடி நிலம், பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும். இந்த சொத்தை கபளீகரம் செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டது.. புதுச்சேரி - சென்னை இதற்காக கடந்த 2010-ம் ஆண்டு போலி ஆவணங்களை தயாரித்து, அதை சிறு சிறு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்தது. இது தொடர்பாகக் கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் களத்தில் இறங்கினார்கள்.. இது தொடர்பான விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ரத்தினவேல், மோகனசுந்தரி, மனோகரன் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த சின்னராசு உள்ளிட்டோர் இணைந்து இந்த மோசடியை அரங்கேற்றியது அம்பலமானது. இந்த தொடர் மோசடியில், அந்த நிலத்திற்குத் தவறான முறையில் பட்டா மாற்றம் செய்த தாசில்தார் பாலாஜி, சார்பதிவாளர் சிவசாமி மற்றும் மாவட்டப் பதிவாளர் ரமேஷ் என சுமார் 17 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கும் அனுப்பப்பட்டனர். சென்னை ஹைகோர்ட் இந்த மோசடி விவகாரம் சென்னை ஹைகோர்ட்டுக்கு சென்றது.. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், சம்பந்தப்பட்ட அனைத்துக் கிரயப் பத்திரங்களையும் ரத்து செய்யவும், நிலத்தை முழுமையாகக் கைப்பற்றிக் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் அதிரடியாக உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மோசடி கும்பலால் பிரிக்கப்பட்ட மனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு அந்த நிலம் மறுபடியும் முறையாகக் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில், இந்த வழக்கில் மறைமுகமாகத் தொடர்பு வைத்திருந்த முக்கியப் புள்ளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனரும், முன்னாள் உழவர்கரை ஆணையருமான சுரேஷ் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது திடீரென கைது செய்துள்ளனர்.. இவர் சார்பதிவாளராகப் பணிபுரிந்த காலகட்டத்தில், காமாட்சி அம்மன் கோயில் நிலம் தொடர்பான ஆவணங்களை சரியாக சரிபார்க்காமல், வேண்டுமென்றே மோசடிக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிலம் மோசடி முத்தியால்பேட்டை லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் பல மணி நேரம் தீவிர விசாரணையம் நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து நள்ளிரவில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனது வீட்டில் நடைபெறவிருக்கும் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பதை காரணமாகக் கூறி, சுரேஷ் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்குப் பாண்டு பத்திரம் மூலம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அரசின் முக்கியத் துறையில் இருக்கும் ஒரு உயர்மட்ட அதிகாரி, பல கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நில மோசடி வழக்கில் சிக்கியிருப்பது, புதுச்சேரி அரசு வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த கைது நடவடிக்கை மூலம், இத்தனை ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பல்வேறு உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அத்துடன் இந்த வழக்கில் இன்னும் பல அதிகாரிகள் சிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்... |